<=================> T N T C W U - திருச்சி மாவட்ட சங்கம் தங்களை தோழமையுடனும், நட்புடனும் வரவேற்கிறது <=================>

TOSS

செயலி புதிது: செய்திகளை டாஸ் செய்யவும்

  
'இன்ஷார்ட்ஸ்' செயலியை நீங்கள் அறிந்திருக்கலாம். பயன்படுத்தியும் வரலாம். செய்தி திரட்டி வகையைச் சேர்ந்த இந்தச் செயலி, முக்கியச் செய்திகளை 60 வார்த்தைகளில் சுருக்கமாகத் தெரிந்து கொள்ளும் சேவையை அளித்து செய்திப் பசியைத் தீர்க்கிறது. நேரத்தையும் மிச்சமாக்கித் தருகிறது.
இப்போது இன்ஷார்ட்ஸ் தனது வாசகர்களுக்காக 'டாஸ்' எனும் புதிய வசதியை அறிமுகம் செய்திருக்கிறது. வாசகர்கள் தாங்கள் முக்கியமாகக் கருதும் செய்தியை டாஸ் செய்யலாம். அதாவது அந்தச் செய்தியைத் தங்கள் தொடர்புப் பட்டியலில் உள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். (அவர்களும் இன்ஷார்ட்ஸ் பயனாளிகளாக இருக்க வேண்டும்).
நண்பர்களுக்கு முக்கியச் செய்திகளை 'நோட்டிஃபிகேஷன்' வடிவில் தெரிவிக்கும் வசதி இது. பொதுவாக எல்லா செய்தித் தளங்களுமே வெளிடத்தக்க செய்திகளைத் தேர்வு செய்ய ஒரு அளவுகோல் வைத்திருக்கின்றன. அதனடிப்படையில் தான் செய்திகளைத் தேர்வு செய்கின்றன, நிராகரிக்கின்றன, முன்னிறுத்துகின்றன.
இந்தத் தேர்வைக் கொஞ்சம் ஜனநாயகமயமாக்கும் வகையில், பயனாளிகள் தாங்கள் முக்கியமாகக் கருதும் செய்திகளை நண்பர்கள் வட்டத்தில் பகிர்ந்து கொள்ளும் வகையில் டாஸ் வசதியை அறிமுகம் செய்துள்ளதாக இன்ஷார்ட்ஸ் வலைப்பதிவு தெரிவிக்கிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனில் செயல்படும் இந்த வசதியைப் பயன்படுத்த முதலில் பயனாளிகள் தங்கள் மொபைல் எண் மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு: http://blog.inshorts.com/2016/01/introducing-toss-without-the-jargon/