<=================> T N T C W U - திருச்சி மாவட்ட சங்கம் தங்களை தோழமையுடனும், நட்புடனும் வரவேற்கிறது <=================>
TNTCWU
                                                   திருச்சி மாவட்டம் VDR/278

அன்பார்ந்த தோழர்களே!
 
                                                    வணக்கம். நமது மாவட்ட செயற்குழு கூட்டம் 22-12-2015 அன்று தோழர். G.சுந்தர்ராஜ்TM (TNTCWU)அவர்களது தலைமையில் நடைபெற்றது.அதில் தோழர். M.இளையராஜா CL (TNTCWU) அஞ்சலியுரை நிகழ்த்தினார்.

                                           மாவட்ட செயற்குழுவை,   மாவட்ட துணை செயலாளர் தோழர். K. விஸ்வநாதன் CL (TNTCWU) தொடங்கிவைத்து திருச்சி மாவட்ட ஒப்பந்த தொழிலார்களின் தலமட்ட பிரச்சினைகளை பற்றியும், மாநிலசெயற்குழுஉறுப்பினர் தோழர். R.கல்லடியான் CL (TNTCWU) செயற்குழு கூட்டதை வாழ்த்தி பேசினார்.
                                                   
                                                    BSNLCCWF அகில இந்திய துணை செயலாளர் தோழர். C.பழனிச்சாமி அவர்கள், BSNLCCWF அகில இந்திய மாநாட்டின் 15 அம்ச  கோரிக்கையும், வழிவகுக்கப்பட்ட போராட்டங்களையும் பற்றியும்,  இன்றைய BSNL ல் நமது நிலைப்பாடு, நமது அடுத்தகட்ட நடவடிக்கை பற்றியும் விளக்கி பேசினார்.

                                                    BSNLEU மாவட்ட செயலாளர் தோழர்.S.அஸ்ஸலாம்பாஷா வழிவகுக்கப்பட்ட போராட்டங்களையும்  பற்றி விளக்கி பேசினார்.

                                                  தோழர். NE.ராஜேந்திரன் CL (TNTCWU),  தோழர். பழனியாண்டி CL (TNTCWU) , தோழர்.M.சுப்பிரமணி CL (TNTCWU) ,
தோழர். குமார் taxCL (TNTCWU), தோழர். முருகானந்தம் CL (TNTCWU),  தோழர். K. விஸ்வநாதன் CL (TNTCWU) ஆகியோர் கிளை பிரச்சினைகளை  பற்றி விவாதிட்டனர்.தோழர். C.பழனிச்சாமி (BSNLCCWF அகில இந்திய துணை செயலாளர்) அவர்கள், அதற்க்கான தீர்வுகளை வழங்கினார்.

                                                      மாவட்ட பொருளர் தோழர்.A.சண்முகம் TM  (TNTCWU) நன்றியுரை  நிகழ்த்தினார்.

தீர்மானங்கள் :

1)  டெண்டர்  அக்ரிமெண்ட்  படி மாத ஊதியம் பிரதி மாதம் 7ம்  தேதிக்குள்    வழங்கவேண்டும்.
2) ஒப்பந்தக்காரர் மாதமாதம்  சம்பள பட்டியல் வழங்கவேண்டும்.
3) விடுபட்ட போனஸ் வழங்கவேண்டும்.
4) I/D கார்டு நிர்வாகம் வழங்கவேண்டும்.
5) அனைவருக்கும் UAN நம்பர் வழங்கவேண்டும்.
6) விரைவாக அரியர்ஸ் வழங்கவண்டும்.
7)  6 Hr's பணியை  8 Hr's மாற்றம் செய்யவேண்டும்.
8)  மாதசம்பளத்தை வங்கி கணக்கில் மட்டுமே வழங்கவேண்டும்.
9) வாரவிடுப்பு வழங்கவேண்டும்.
10) கோர்ட் கோஸ் உள்ள தோழர்கள் தோழர்.முருகானந்தம் அவர்களை தொடர்பு கொள்ளவும்.
11) கேபிள் பகுதிககு T.A  வழங்கவேண்டும்.
12)  ஒப்பந்த தொழிலாளர்களுக்கு  என்று ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும். 
13) அனைவருக்கும் UAN நம்பர் வழங்கவேண்டும்.
14) கிளைகள் தோறும் கிளைக்கூட்டங்கள் நடத்துவது.
15) ஒரு சுற்றறிக்கை முலம் ஒப்பந்த தொழிலாளர் பட்டியல் தயாரிப்பு குழு  சங்கத்தின் முலம் நியமிக்கவேண்டும்.