<=================> T N T C W U - திருச்சி மாவட்ட சங்கம் தங்களை தோழமையுடனும், நட்புடனும் வரவேற்கிறது <=================>

25-06-2016 மாவட்ட செயற்குழு கூட்டம்




TNTCWU
                                                   திருச்சி மாவட்டம் VDR/278

                                  சுற்றறிக்கை
அன்பார்ந்த தோழர்களே!
 
                                                   
வணக்கம். நமது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர்.G.சுந்தர்ராஜ்  அவர்களது தலைமையில் நடைபெற உள்ளது.
      
                                         
நாள்   : 25-06-2016  சனிக்கிழமை மாலை 03-00
                                         
இடம் : திருச்சி சங்க அலுவலகத்தில்

பங்கேற்பு  : தோழர் C.பழனிசாமி, .. துணைத் தலைவர் BSNLCCWF,  தோழர் சி.வினோத்குமார் மாநில செயாளர்  TNTCWU மற்றும் திருச்சி மாவட்ட  TNTCWU மாநில,மாவட்ட சங்க நிர்வாகிகள் , கிளை செயலாளர்கள் மற்றும் செயல்வீரர்கள்.

அஜண்டா                                   
1)   ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுகிறதா ?
2)     Attendance Register  பராமரிக்கப்படுகிறதா ?
3)     பிரதிமாதம்7-ஆம் தேதிக்குள் ஊதியம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகின்றதா ?
4)    ஆறு மாதத்திற்கு ஒரு முறை உயர்த்தப்பட்ட பஞ்சப்படி (  VARIABLE
DEARNESS ALLOWANCE)  வழங்கப்படுகின்றதா ?
5)  மாதச்சம்பளம் 26  தினங்கள் அடிப்படையில்( நாகர்கோவில், குன்னூர் தவிர) வழங்கப்படுகின்றதா ? கூடுதல் மணி நேரம் வேலை செய்பவர்களுக்கு மிகுதி நேரப்படி கிடைக்கின்றதா
6)      கேபிள் பராமரிப்பு மற்றும் டவர் பராமரிப்பு பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு போக்குவரத்துப்படி வழங்கப்படுகின்றதா ?
7)       EPF, ESI  திட்டங்கள் கறாரக அமுல்படுத்தப்படுகின்றதா ?.
8)       EPF, ESI திட்டங்களில் முறைகேடுகளை தடுக்கவும் கண்காணிப்பதற்கும் மாவட்ட அளவில் கண்காணிப்பு அதிகாரியை நியமிக்கப்பட்டு உள்ளாரா ?.
9)  EPF- விற்கான UNIVERSAL ACCOUNT NUMBER ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்கப்படுள்ளதா ? அதில் பழைய ஒப்பந்தகாரரின் EPF எண் இணைக்கப்பட்டுவிட்டதா ?
10)  விடுமுறை தினங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதா ?
11)  போனஸ் சட்டத்தின்படி போனஸ் கிடைத்ததா ?
12)  கேபிள் பணிக்கு ஒவ்வொரு துணைக்கோட்டத்திற்கும் குறைந்தபட்சம் இரண்டு ஒப்பந்தத் தொழிலாளர்களை நியமிக்கப்பட்டுள்ளார்களா ?
13)   WAGE SLIP, EMPLOYMENT CARD வழங்கப்பட்டுள்ளதா ?
14)  நீதிமன்றம் மற்றும் மாநில அலுவலக உத்தரவுப்படி 20-05-2009 முதல் சம்பள நிலுவை கிடைத்து விட்டதா ?
15)   UAN CARD , UAN PASS BOOK , ESI SMART CART கைவசம் உள்ளதா ?
16)மாவட்டத்தில் உள்ள ஒப்பந்தகார்ர் பெயர், அவருக்கு வழங்கப்பட்ட வேலை, ஒப்பந்த ஊழியர் எண்ணிக்கை விவரமும் தெரிவிக்க வேண்டும்
17)   ஒப்பந்த ஊழியரின் பிரச்சினைகளின் தீர்வுக்கு என் தனி பொறுப்பு அதிகாரி இருக்கின்றாரா ?
18)   துப்புரவு பணி நேரம் முறையாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளதா ?

நமது மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், அனைத்து கிளைச்செயலார்கள்  மற்றும் செயல்வீரர்கள் தவறாமல் குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டும்.

,தோழமையுடன் 
K.விஸ்வநாதன்
மாவட்டச் செயலாளர்(பொ)
)