<=================> T N T C W U - திருச்சி மாவட்ட சங்கம் தங்களை தோழமையுடனும், நட்புடனும் வரவேற்கிறது <=================>

Monday 16 October 2017

காத்திருப்பு போராட்டம் வெற்றி


நாம் எற்கனவே நமது ஒப்பந்த தொழிலாளர்களின் 9 கோரிக்கைகளை முன்வைத்து 7-10-2௦17 அன்று உண்ணாவிரதம் நடத்தினோம். அதன்பின் சில முன்னேற்றங்கல் வந்தாலும் முழுவதுமாக பிரச்சினைகள் தீரவில்லை, ஆகவே அடுத்தகட்டமாக 12-10-2௦17 அன்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது, தோழர் C.பழனிச்சாமி (அகில இந்திய உதவி பொது செயலர் BSNLCCWF) துவக்கிவைத்தார், மாவட்டம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட தோழர்கள் கலைந்து கொண்டனர். 🔺 போராட்டத்தையொட்டி மாவட்ட அலுவகத்தில் காவல்துறை போடப்பட்டிருந்ததது ,
ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை, காவல்துறை தலையீட்டின் பேரிலே பேச்சுவார்த்தை நடைபெற்றது.🔻
 PGM, DGM(A), DGM-CFA-I, AGM-SALES, AGM-CM நிர்வாகத்தரப்பிலும், நமது சங்கத்திலிருந்து தோழர் T.தேவராஜ் DP, தோழர் S.அஸ்லாம்பாஷா DS, தோழர் G.சுந்தராஜ் ADS, தோழர் R.கோபி DT, தோழர் C.பழனிச்சாமி (அகில இந்திய உதவி பொது செயலர் BSNLCCWF)  கலந்துகொண்டனர். கிழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன , 
1) விடுபட்ட ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் இன்றைக்குள் வழங்கப்படும்,
2) விடுபட்ட ஒப்பந்த ஊழியர்களுக்கு நிலுவை தொகை சனிகிழமைக்குள்        வழங்கப்படும்,
3) 20-05-2009 முதல் கிடைக்கவேண்டிய நிலுவை தொகை பட்டுவாடா சம்பந்தமாக ஸ்டே விலக்கு செய்வதற்கு மாநில நிர்வாகத்திற்கு கடிதம் எழுதப்படும்,
4) போனஸ் பட்டுவாடாவிற்கு அனைத்து ஒப்பந்தகாரரிடம் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. திபாவளிக்குள் பட்டுவாடா செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,
5) விடுபட்ட ஒப்பந்த ஊழியர்களுக்கு ஆகஸ்ட் 15 ஊதியம் உடனடியாக வழங்கப்படும்,
6) பணி நேரம் 6 மணி நேரத்திலிருந்து 8 நேரமாக உயர்த்துவது, திறனுக்கேற்ற ஊதியம் போன்றவை தேவைக்கேற்றபடி முடிவு செய்யும்,
7) ஆளில்லா தொலைபேசி நிலையங்களில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு உரிய ஊதியம் கொடுக்க வேண்டுமென்று கேட்டோம், அந்த லிஸ்ட் கொடுத்தல் பரிசிலித்து முடிவு செய்யப்படும்,
8) குளித்தலை, முசிறி, கரூர் பகுதியில் MAN POWER டெண்டர் அமுல்படுத்துவது சம்பந்தமாக பரிசிலனை செய்யப்படும்.

போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து தோழர்களுக்கும், தோழிகளுக்கும் இரண்டு மாவட்ட சங்கங்கள் சார்பாக மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.